-
மதுரைக்கிளை தொடக்கவிழா
கணித்தமிழ்ச்சங்க மதுரைக்கிளை தொடக்கவிழா டியூக் உணவக அரங்கில் (04 -02 -2012 ) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தலைமையேற்று சிறப்பித்த மதுரை ஆட்சியர் திரு உ. சகாயம் மதுரைக்கிளைத் தொடக்க விழாவினை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். மதுரைக்கிளை செயற்குழு உறுப்பினர் திரு சுப்ரமணியின் புத்தகத்தை வெளியிட்டு மதுரை கணித்தமிழ் உறுப்பினர் திரு ஜனார்த்தனன் ‘டிக் சாப்ட்’ நிறுவனரின் மாணவர்களுக்கான இணையதளத்தினையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் கணித்தமிழ்ச்சங்க தலைவர் திரு.மா.ஆண்டோ பீட்டர் கலந்து கொண்டனர்.
date : 04 -02 -2012