-
திருச்செங்கோட்டில் இணைய பயிலரங்கம்
திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் 11-02-2012 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு ”இணையப் பயிலரங்கம்” கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது. முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். கணித்தமிழ்ச்சங்க உறுப்பினரும், விசுவல் மீடியா கம்யூனிகேசனின் சி.இ.ஒ திரு செல்வமுரளி அவர்கள் தமிழ் வலைப்பூக்களை எவ்வாறு wordpress-ல் உருவாக்கலாம் என்று விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துக்கூறியும் உருவாக்கியும் காட்டினார்.
date : 11-02-2012