தமிழ் இணைய மாநாடு - தமிழ்மென்பொருள் கண்காட்சி
INFITT 2010
kalaignar
INFITT 2010

கோவை உலகத் தமிழ் இணைய மாநாடு
----------------------------------------------------------------------------------

தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் சூன் மாதம் 23 ஆம் நாளிலிருந்து 27 ம் நாள் வரை நடக்கவிருப்பதை அனைவரும் அறிவோம்.   இச்செம்மொழி மாநாட்டையொட்டி 3 நாட்கள் உலத் தமிழ் இணைய மாநாடும் உத்தமம் அமைப்புடன் இணைந்து தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடத்தப்படுகிறது.

தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து சர்வதேச அளவில் மாநாடுகளை உத்தமம் அமைப்பு சிறப்பாக இதுவரை சென்னை (1999, 2003) சிங்கப்பூர் (1997, 2000, 2004) மலேசியா (2001) , அமெரிக்கா (2002), ஜெர்மனி (2009) ஆகிய நாடுகளில் தமிழ் இணைய மாநாடுகள் நடந்துள்ளன. மாநாடு கருத்தரங்கம், சமுதாய குழுமம், தமிழ்க் கணினி கண்காட்சி ஆகிய மூன்று  சிறப்புக் கூறுகளைக் கொண்ட குழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக 2010 விளங்கும்.   தமிழ்க் கணினியம், தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள்,  பெருமுயற்சிகளும் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் தீர்வுகளை நோக்கி முன்னேறவும்  மாநாட்டு அரங்குகள் விளங்கும்.

உலகெங்கிலுமிருந்து தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் தமிழில் தங்கள் கருத்துரைகளைத் தெரிவிக்க  உள்ளார்கள்.  விரிவான விவாதங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்க ஏதுவாக 300 பேராளர்கள் மட்டுமே மாநாட்டில்  பங்கேற்க வகைச் செய்யப்பட்டுள்ளது.   தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் www.tamilinternetconference.org என்ற இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்தல் வேண்டும். 

அனிமேஷன் போட்டிகள்:
------------------------------------------------

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாயிலாக தமிழ் இணைய மாநாட்டு குழுவினர் இணைந்து பல்வேறு  போட்டிகள் நடத்தத் திட்டமிட்டு சிறப்பான  அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் தங்கள் கணினித் திறனை வெளிப்படுத்தும் முகமாக முதன் முறையாக, மாநாட்டின் சிறப்பினை அனைவரும் பெறவேண்டும் என்ற நமது மாண்புமிகு முதல்வரின்  ஆர்வத்திற்கு இணங்க, மிகப்பெரிய அளவில் ஆறுமுதல் பத்தாம் வகுப்பு பயிலும் தமிழகப் பள்ளிகளின் மாணவச் செல்வங்களுக்கு Paint Brush ((தூரிகை வரைவு) போட்டி நடைபெறவுள்ளது.  திருக்குறள் (அறத்துப்பால், பொருட்பால்), பழமொழி, ஆத்திசூடி என்ற இம்மூன்றனுள்   ஒன்றைத்    தேர்ந்து கொண்டு, ஒரு பாடலை வரைகலைப்பதிவை ஓரே படக்காட்சியாக Paint Brush (தூரிகை வரைவு) அல்லது அதேபோன்ற மென்பொருள்    தூரிகைச் சாதனத்தைக்        கொண்டு    45     நிமிடங்களுக்கும்  குழுப் போட்டிகளுக்கு            1 மணி நேரம் என்ற அளவில் ஒவ்வொரு மாவட்டத்தில் தெரிவு செய்த பொறியியல் கல்லூரியில் 12.02.2010 அன்று நடைபெறவிருக்கிறது.

தமிழகத்திலுள்ள அனைத்து மேநிலைப் பள்ளி  மாணவச் செல்வங்களுக்கு (ANIMATION)  அசைநிலை  வரைகலை போட்டியும் நடைபெறவிருக்கிறது.   இப்போட்டிகளுக்கு பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், கலைஞரின் சங்கத்தமிழ் பாடல்கள் இம்மூன்றனுள் ஒன்றைத் தேர்ந்து கொண்டு ஒரு பாடலை படக்காட்சியாக அசைநிலை வரைகலை (ஹniஅயவiடிn)  அல்லது அதே போன்ற மென்பொருள் தூரிகைச் சாதனத்தை கொண்டு ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் தெரிவுசெய்த பொறியியல் கல்லூரியில் 12.02.2010 அன்று நடைபெறவிருக்கிறது.   இப்போட்டிகள் முதல் சுற்றாக மாவட்ட ரீதியாக நடைப்பெற்று,  பிறகு இறுதி சுற்றாக  தமிழக அளவில்  நடைபெறவிருக்கிறது.   தமிழக அளவில்  சுமார் 8000  பள்ளிகளிலிருந்து ஏறத்தாழ 15,000 மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் கலந்துக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.   வெற்றி பெறுகிறவர்களை கோவையில் நடைபெறும் இணைய மாநாட்டில் பரிசளிக்கப்படுவர்.  போட்டிகளில் வெல்லும் மாணவ, மாணவியர்களுக்கு   கண்ணையும்,  கருத்தையும்  கவரும்   தகுதியான பரிசுகளும், அதிகமான மாணவர்களை தனிப்போட்டி,  குழுப்போட்டிக்கு அனுப்பவிருக்கும் பள்ளிகளுக்கு LAPTOP\  (மடிக்கணினி) பரிசும் வழங்கப்படவிருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு அமைந்தது போல தமிழகத்திலுள்ள  அனைத்து அரசு, தனியார், நிகர்நிலை, பல்கலைக்கழகங்கள்,  கலை, அறிவியல், கல்லூரிகள்,   பொறியியல், மருத்துவம், சட்டம்,  வேளாண்மை, விளையாட்டு நலம் வாரியாக  மற்றும் மாவட்ட வாரியாக தமிழ்க் கணினி போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.

தமிழ் இணைய மாநாட்டு கட்டுரைகள்:
---------------------------------------------------------------------------

கட்டுரைச் சுருக்கம் அல்லது கூட்டு ஆய்வாளர்களின் சுய ஆய்வு குறித்தானதாக இருக்கவேண்டும்.  இவ்வாய்வு கணினியில் தமிழ் பயன்பாடு பற்றிய எந்த ஒரு தலைப்பிலாவது இருக்கலாம்.   இது தமிழ் மொழியைப் பற்றி மட்டுமோ அல்லது கணினியைப் பற்றி மட்டுமோ இல்லாமல் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் பல்லூடகம் போன்ற துறைகள் எப்படியெல்லாம் கணினி, கையடக்கத் தொலைபேசி போன்ற மின்சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பன பற்றி ஏதாவது ஒரு தலைப்பில் இருக்கலாம்.

உங்களின் கட்டுரைச் சுருக்கம் ஒரு பக்கத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.   தமிழில் இருந்தால் அது ஒருங்குறியில்தான் இருக்கவேண்டும்,  வேறு எழுத்துருவில் தட்டுச்சுச் செய்ய நேரிட்டால் அதை நீங்களே ஏதாவது ஒரு உருமாற்றுக் கனிமத்தைப் பயன்படுத்தி ஒருங்குறியின் எழுத்துருவுக்கு  மாற்றி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுரைச் சுருக்கம் அனுப்பவேண்டிய இறுதி நாள் எல்லை பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள், 2010. கட்டுரைச் சுருக்கம் குறித்தான முடிவு மார்ச்சு மாதம் 5 ஆம் நாள், 2010 அன்று தெரிவிக்கப்படும். முழு வடிவமான கட்டுரையை அனுப்பவேண்டிய கடைசி நாள் ஏப்ரல் மாதம் முதல் தேதி  2010.முழுக் கட்டுரையில் மாற்றம் ஏதும் இருப்பின் ஏப்ரல் மாதம் பதினைந்தாம் நாளுக்குள் திருந்திய வடிவம் எங்களுக்குக் கிடைக்கவேண்டும்.

தங்களின் கட்டுரைச் சுருக்கம் கருத்தரங்கில் படிக்க ஏற்றுக்கொள்ளப்பட்டதெனில் தங்களின் ஆய்வுக்கட்டுரையை ஆறு பக்கத்திற்கு மிகாமல் மேற்குறிப்பிட்ட நாளுக்குள் அனுப்பவேண்டும்.  ஆய்வுக் கட்டுரையில் தாங்கள் கொடுத்துள்ள விவரங்கள் கட்டுரைச் சுருக்கத்தில் தாங்கள் குறிப்பிட்டபடியே  இருக்கவேண்டும். இவ்வகையில் தங்களின் கட்டுரைச் சுருக்கத்தையும் அதன் பின் தாங்கள் அனுப்பும் ஆய்வுக் கட்டுரையையும் பரிந்துரைக் குழுவினர் தர நிர்ணயம் செய்வர் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.    இரண்டுமே ஏற்புடையதாக இருக்கும் தருணத்தில்தான்  தங்களின் கட்டுரையைக் கருத்தரங்கில் படிக்க  அனுமதி அளிக்கப்படும்.   கட்டுரையைக் கருத்தரங்கில் முப்பது நிமிடங்களுக்குள் படிக்கவேண்டும்.  இதற்குத்தக்க தங்களின் படைப்பு விவரங்களைத் தாங்களே  ஏற்பாடு செய்து கொள்வது அவசியம்.  கட்டுரைச் சுருக்கமும் கட்டுரையும் மின்வடிவில் தான் தாங்கள் எங்களுக்கு   அனுப்பவேண்டும்.  இவற்றை அச்சுப்பிரதியாகப் பெற்றுக்கொள்ள  இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  கட்டுரை படைப்பாளர்கள் தான் தங்களுடைய கட்டுரையைக் கருத்தரங்கில்  படிக்க இயலும் என்பதையும்  நினைவில் கொள்ள வேண்டும்.   இத்தமிழ் விரும்புவோர் ஒரு பக்க அளவிலான கட்டுரைச் சுருக்கத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சுச் செய்து ti2010@infitt.org கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி:
-------------------------------------------------------------------------

தமிழ்க் கணினி வளர்ச்சி  குறித்த தமிழ் மென்பொருள் கண்காட்சி கோவை செம்மொழி மாநாட்டிலும் நடைபெறுகிறது.  இக்கண்காட்சி பத்தாயிரம் சதுர அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட  மென்பொருள்  கூடங்கள்  அமைக்கப்படுகிறது.   இக்கண்காட்சியில் அனைத்துலகமும் ஈர்க்கும் அளவிற்கு மென்பொருட்கள்,  தமிழக அரசின்  மின் ஆளுகை  அரங்குகள்,  தமிழ் மல்டிமீடியா சிடி அரங்குகள், தமிழ் மென்பொருட்கள் இடம் பெறுவிருக்கின்றன.   இக்கண்காட்சியின் வாயிலாக பொதுமக்கள்  தமிழ் மென்பொருளையும் தமிழக அரசின்  தமிழ் பயன்பாடுகள் மற்றும் அலுவலக செயல்பாடுகளையும்   பயன்படுத்திப் பார்க்கலாம்.   கணித் தமிழ்ச்சங்கம் என்ற தமிழ்க் கணினி அமைப்பு  தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இக்கண்காட்சியை    நடத்தவிருக்கிறது.   இக்கண்காட்சிப் பற்றி மேலும் தகவலுக்கு மா.ஆண்டோ பீட்டர் ktsasia@gmail.com தொடர்புக் கொள்ளலாம்.