Tamil Unicode Convergence Resolution

Tamil Unicode Convergence Resolution handed over by INFITT Chair to Committee Chair Dr.M.Anandakrishnan on 17th May 2010

தமிழ் விக்கிபீடியா கட்டுரைப் போட்டி(30/3/10)

செம்மொழி மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் விக்கிபீடியா கட்டுரைப் போட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கணினித்தமிழ் கருத்தரங்கு (24.02.2010 to 27.02.2010)

சென்னை பல்கலைக்கழகத்தில் 3 நாள் கணினித்தமிழ் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. மொழியியல் பேராசிரியர் தெய்வசுந்தரம் சிறப்புற நடத்த, கணித் தமிழ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செம்மொழி மாநாடு: இணைய மாநாட்டுக் குழு கூட்டம் (02.02.2010)

கோவை செம்மொழி மாநாட்டை ஒட்டி நடைபெறும் உலகத்தமிழ் இணைய மாநாட்டில் கணித்தமிழ்ச் சங்கம் பங்காற்றுதல் குறித்து சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு டாக்டர்.மு.அனந்தகிருஷ்ணன் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள், நாங்கம் புருஷோத்தமன், சிங்கப்பூர் மணியம் மற்றும் பல தமிழ் நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

செம்மொழி மாநாட்டின் தலைமைச் செயலகக் கூட்டம் (19-01-2010)

கோவையில் தமிழக அரசின் சார்பில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் உலகத் தமிழ் இணைய மாநாடும் நடப்பதையொட்டி, தலைமைச் செயலகத்தில், தமிழ் இணைய மாநாட்டுக் குழுவின் கூட்டம், குழுவின் தலைவர் கான்பூர் ஐஐடி தலைவர் பேராசியர் மு.ஆனந்த கிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் குழுவின் அமைப்பாளர் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, மாநாட்டின் சிறப்பு அலுவலர் அலாவுதீன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கணேசன், உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி,கணித்தமிழ்ச் சங்க தலைவர் மா.ஆண்டோ பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மின்புத்தகம் பயிற்சிப் பட்டறை (06.12.2009)
கணித்தமிழ்ச் சங்கமும், தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய “மின்புத்தங்கள் தயாரிப்பது எப்படி?” என்ற பயிற்சிப் பட்டறை சென்னையில் நடைப்பெற்றது. இதன் துவக்க நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.மா.ராஜேந்திரன், திரு.லேனா தமிழ்வாணன்,திரு நரசைய்யா, திரு.மாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பயிற்சியை ஜெர்மனியை சேர்ந்த திருமதி.சுபாஷினி டிரம்மல் நடத்தினார்.

பாராட்டுக்கூட்டம் (11.11.2009)

ஜெர்மனி தமிழ் இணைய மாநாடு குறித்த சிறப்பு மாதக் கூட்டம் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் நடைபெற்றது. கூட்ட முடிவில் உத்தமம் இயக்குநர் பெருங்கணிக்கோ கவியரசனுக்கும், தமிழக அரசின் மொழிப்பெயர்ப்புத்துறை இயக்குநர் அருள் நடராசனுக்கு பாராட்டும் நடைபெற்றது. ஜெர்மனி மாநாட்டுக்கு உதவிய காக்ஸ் & கிங்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பாவில் தமிழ் மென்பொருள் வளர்ச்சி(08-09-2009)

ஐரோப்பாவில் தமிழ் மென்பொருள் கண்காட்சிகளை நடத்திட கணித்தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறப்புக்கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் உலகத்தமிழர் பேரவை தலைவர் ஜனார்தனம், பிரான்ஸ் தமிழ்ச்சங்க பிரதிநிதி கோகுலன், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன், எம்பிஎல்ஏ சந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெர்மனி தமிழ் இணைய மாநாடு குறித்த மாதக்கூட்டம்(28-07-2009)

ஜெர்மனி தமிழ் இணைய மாநாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் சென்னை பல்கலைக்கழக தமிழ்த் துறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர்.தெய்வசுந்தரம், திரு.டி.என்.சி.வெங்கட்ரங்கன் மற்றும் திரு. வெங்கடேஷ் (காக்ஸ் & கிங்ஸ்) அவர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.

தமிழ் மென்பொருள் கண்காட்சி (04-07-2009)

சென்னை தமிழ் மென்பொருள் கண்காட்சியை திருமதி. கனிமொழி எம்.பி. அவர்கள் துவக்கி வைத்தார்.

இங்கிலாந்து தமிழறிஞர் சிவாப்பிள்ளை

12.12.2008

பாரதியார் நினைவுநாளையட்டி நடைபெற்ற கணித்தமிழ்ச்சங்க மாதக்கூட்டத்தில் இங்கிலாந்து தமிழறிஞர் சிவாப்பிள்ளை அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.